2025 ஜூலை 21, திங்கட்கிழமை

யோகாதின நிகழ்வு…

Editorial   / 2018 ஜூன் 21 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு யோகா ஆரோக்கிய இளைஞர் கழகமும் மட்டக்களப்பு மேற்குக் கல்வி வலயமும் இணைந்து, கலாபூசணம் செல்லையா துரையப்பா மாணவர்கள் நடத்திய 4ஆவது சர்வதேச யோகா தின நிகழ்வு, மகிழடித்தீவு பொது விளையாட்டு மைதானத்தில், இன்று (21) காலை 6.30 மணிக்கு நடைபெற்றது.

இதில், பாடசாலை மாணவர்கள் 400 பேரும் ஆசிரியர்களும் பங்கேற்றிருந்தனர்.

மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் மா.உதயகுமார், பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார்.

முதன்முறையாக, மண்முனை தென்மேற்குப் பிரதேசத்தில், அதிக மாணவர்களை ஒரே இடத்தில் கொண்டு யோகாசனப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(படப்பிடிப்பு: வ.திவாகரன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X