2025 மே 21, புதன்கிழமை

லொறி விபத்து...

Kogilavani   / 2017 நவம்பர் 20 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன்

 

வெலிமடையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த லொறி, ஹட்டன் -கொழும்பு பிரதான வீதி, குயில்வத்தைப் பகுதியில், ஞாயிற்றுக்கிழமை இரவு பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக, வட்டவலை பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து வெலிமடைக்கு நீர்த்தாங்கிகளை ஏற்றச்சென்ற லொறியே, இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

எதிரே வந்த வாகனத்துக்கு இடமளிக்கும்போதே, இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக, பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேற்படி லொறியில் சாரதி உட்பட இருவர் பயணித்துள்ளனரென்றும் இவ்விருவருக்கும் எவ்வித ஆபத்தும் இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துத் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X