R.Tharaniya / 2025 நவம்பர் 04 , பி.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் பரிசளிப்பு விழாவும், நிறுவுனர் நினைவு தினமும் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சோமசுந்தரப் புலவர் அரங்கில் செவ்வாய்கிழமை (04) நடைபெற்றது.
கல்லூரியின் வளாகத்தில் அமைந்துள்ள சரஸ்வதி சிலையடியில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. பின்னர் தேசியக் கொடி, பாடசாலைக் கொடி என்பன ஏற்றி வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து விருந்தினர்களுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் மேற்கத்திய இசை வாத்தியங்கள் முழங்க விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றி வைக்கப்பட்டு, இறை வணக்கம் இசைக்கப்பட்டு நிகழ்வானது ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து வரவேற்புரை, தலைமையுரை, விருந்தினர்கள் உரைகள், மாணவர்களது கலை நிகழ்வுகள் மற்றும் பரிசில்கள் வழங்கல் என்பன இடம்பெற்றன.
கல்லூரியின் பதில் அதிபர் மயூரன் தலைமையில் நடைபெற்ற இந்த பரிசளிப்பு விழாவில், விருந்தினர்கள், ஆசிரியர்கள், அயற்பாடசாலை அதிபர்கள் - ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் இந்த பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டனர்.












பு.கஜிந்தன்
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago