Freelancer / 2023 ஒக்டோபர் 09 , பி.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லம்பட்
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (மெசிடோ) வட மாகாணத்தில் சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடுகின்ற சுய தொழில் முயற்சியாளர்களை இனம் கண்டு அவர்களுக்கான சுய தொழில் பயிற்சிகளை வழங்கி பயனாளிகளை ஊக்குவித்து வருகின்றது.

தொழில் முயற்சியாளர்களுக்கு தங்களுடைய உள்ளூர் உற்பத்திகளான கருவாடு, சவர்க்கார் உற்பத்திகள், பனை உற்பத்தி பொருட்களை கண்டிக்கு கொண்டு சென்று மூன்று நாட்கள் கடந்த(6.7,8) ஆம் திகதிகளில் நடை பெற்ற சந்தை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்கள் தங்களுடைய உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்து பல இலட்சம் லாபம் ஈட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அத்தோடு உள்ளுர் உற்பத்தித் தொழில் முயற்சியாலர்களை ஊக்குவித்த நிறுவனமான எமது நிறுவனத்திற்கும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டிருந்தது.
அது மட்டும் இன்றி சர்வதேச சந்தை வாய்ப்பு மற்றும் கண்காட்சி இம்மாதம் 30ம் திகதி தொடக்கம் எதிர்வரும் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை (Vietnam,Hanoi. 2023.October 30 to November 02 2023) வியட்நாம் நாட்டில் சர்வதேச வர்த்தக கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.




8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago