2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சி கண்காட்சி

Mayu   / 2026 ஏப்ரல் 21 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழில் தேடும் இளைஞர், யுவதிகளின் நலனைக் கருத்திற்கொண்டு மன்னார் நகர பிரதேச செயலகம், மனித வலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த 'வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சி கண்காட்சி' இன்று (21) செவ்வாய்க்கிழமை மன்னார் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

மன்னார் நகர பிரதேச செயலாளர் கா. காந்தீபன் தலைமையில் நடைபெற்ற இக்கண்காட்சியில், திணைக்களத் தலைவர்கள், அரச மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு வழங்குநர்கள், தொழிற்பயிற்சித் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அத்துடன், வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சியை எதிர்பார்க்கும் நூற்றுக்கணக்கான இளைஞர், யுவதிகள் ஆர்வத்துடன் இதில் பங்கேற்றனர்.

இதன்போது, பங்கேற்ற இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புச் சந்தர்ப்பங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நெறிகள் குறித்து விரிவான தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.

அத்துடன், தங்களுக்குப் பொருத்தமான துறைகளைத் தெரிவு செய்த விண்ணப்பதாரிகள், அதற்கான விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்தி செய்து உரிய அதிகாரிகளிடம் கையளித்தனர்.

எஸ்.ஆர்.லெம்பேட்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .