Freelancer / 2023 ஒக்டோபர் 23 , பி.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
வேலங்குளம் கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட 08 கிராமங்களை சேர்ந்த மக்களினால் இன்றையதினம் வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டத்தின்போது வவுனியா வேலங்குளம் கிராம சேவையாளரினை அச்சுறுத்தியவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கோரியும் தங்களிற்கான நிரந்தர கிராம சேவையாளரை நியமிக்க கோரி கோசங்களை எழுப்பியதோடு பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
பிரதேச செயலக பிரதான வாயிலை மறித்து பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய பொதுமக்களையும் வெளியேற விடாமல் தடுத்து ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்ததுடன், பிரதேச செயலக அலுவலகத்தினுள்ளும் நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
க. அகரன்



13 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
48 minute ago
1 hours ago