2025 மே 20, செவ்வாய்க்கிழமை

விபத்து…

Editorial   / 2017 நவம்பர் 25 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் தில்லையடி பகுதியில் இன்று (25) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டி முழுமையாகவும், தனியார் பஸ் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளனவென, புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ்ஸொன்று, தில்லையடி பகுதியில் வைத்து பிறிதொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது, வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் நின்ற முச்சக்கர வண்டியை மோதித் தள்ளிக்கொண்டு, அருகில் உள்ள பற்றைக்குள் சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தால் பஸ் சாரதி உட்பட பஸ்ஸில் பயணம் செய்த மூவருக்கு சிறுகாயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் முச்சக்கர வண்டியில் எவரும் இருக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(படப்பிடிப்பு: ரஸீன் ரஸ்மின்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X