Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 டிசெம்பர் 04 , பி.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பச்சநூர் சந்தியிலிருந்து கங்கை வரையிலான நான்கு கிலோ மீற்றர் வீதியைப் புனரமைத்துத் தருமாறு தெரிவித்து, பச்சநூர் சந்தியில் விவசாயிகள், இன்று (04) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த வீதி, விவசாயிகள் பயன்படுத்துகின்ற முக்கிய வீதியாகும். இவ்வீதியூடாக நாள் தோரும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள், கங்கைப் பகுதியில் இருந்து மணல் ஏற்றி வருவதால், இவ்வீதி பழுதடைந்துள்ளது.
இதனால் வீதியூடாக தங்களது வயல்களுக்கு நெல் மூட்டைகளையும், பசளைகளையும் வாகனங்களில் கொண்டு செல்லமுடியாதுள்ளதாகவும் அவற்றைத் தாம் தலையில் சுமந்தே வயல்களுக்குச் செல்வதாகவும், விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்வீதியை புனரமைத்துத் தருமாறு, விவசாய சங்கங்களினூடாக, திருகோணமலை மாவட்ட அரசியல்வாதிகளிடமும் அரச அதிகாரிகாளிடமும் பல கடிதங்கள் அனுப்பியும் இதற்கான தீர்வுகள் இன்னும் எட்டப்படாத நிலையிலேயே, தாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
(படப்பிடிப்பு: தீஷான் அஹமட்)
11 minute ago
22 minute ago
26 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
22 minute ago
26 minute ago
55 minute ago