Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Ilango Bharathy / 2021 ஜூலை 25 , பி.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்நிலையில், 38ஆவது கறுப்பு ஜூலையும் , வெலிக்கடை படுகொலை நினைவும், திருகோணமலை கடற்கரையில் அமைந்துள்ள வெலிக்கடை தியாகிகள் நினைவரங்கத்தின் முன்பாக, நேற்று (25) சுடரேற்றி அஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டது.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், அவ்வியகத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரன் ( ஜனா) தலைமையேற்றிருந்தார்.
அதில், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியம் வினோநோதராத லிங்கம், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் உப- தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதித் தவிசாளருமான இந்திரகுமார பிரசன்னா, கட்சியின் இளைஞர் அணியின் உப- தலைவர் இரத்தினஐயா வேணுராஜ் மற்றும் ஆதரவாளர்களும கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வை நடத்தவிடாது தடுப்பதற்கு பொலிஸார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். எனினும், பொலிஸாரின் தடையை மீறி இந்த நினைவு நிகழ்வு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (படங்களும் தகவலும்-கே எல் டி யுதாஜித்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago