2025 ஜூலை 26, சனிக்கிழமை

வெல்லாவெளி புதிய பொலிஸ் நிலையம்...

Editorial   / 2017 ஜூலை 29 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, வெல்லாவெளி பிரதேசத்துக்கான புதிய பொலிஸ் நிலையம், இன்று காலை திறந்துவைக்கப்பட்டது.

இதுவரை காலமும் வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மண்டூர் பாலமுனை பிரதேசத்தில் மக்கள் குடியிருப்புப் பகுதியில் இயங்கி வந்த வெல்லாவெளி பொலிஸ் நிலையமே, புதிய பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டுத் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

30 வருடங்களுக்கு முன்னர் வெல்லாவெளி பொலிஸ் நிலையம்  இருந்த இடத்திலேயே, புதிய பொலிஸ் நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசிர் அகமட், பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோ.கருணாகரம், மா.நடராஜா, ஞா.கிருஸ்ணபிள்ளை உட்பட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

(படப்பிடிப்பு: வா.கிருஸ்ணா, வடிவேல் சக்திவேல், தம்பிப்பள்ளை தவக்குமார்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X