2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

சசித்திர சேனநாயக்க பந்தை வீசி எறிவதாக ICCயிடம் முறையீடு

Super User   / 2014 ஜூன் 03 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல்ப் பந்துவீச்சாளர் சசித்திர சேனநாயக்க பந்தை வீசி எறிவதாக சர்வதேசக் கிரிக்கெட் சபையிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவது ஒரு நாள் சர்வதேசப் போட்டியின் பின்னர் போட்டியின் நடுவர்களான மரையஸ் ஏறஸ்மாஸ், இயன் குட் மற்றும் மூன்றாவது நடுவரான கிறிஸ் கபனி ஆகியோர் குறித்த போட்டியின் மத்தியஸ்த்தரான ஜெவ் குரோவிடம் இந்த முறையீட்டை செய்துள்ளனர்.

சசித்திர சேனநாயக்க வீசும் சில பந்து வீச்சுக்கள் விதி முறையை மீறியுள்ளதாக நடுவர்கள் முறையீடு செய்துள்ளனர். இதனடிப்படையில் 21 நாட்களுக்குள் சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் பரிசோதனைக்கு சசித்திர சேனநாயக்க செல்ல வேண்டும். அதில் அவரின் பந்துவீச்சு பற்றி முடிவு எடுக்கப்படும். அதுவரையில் அவர் சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியும். இதற்க்கான அறிக்கை இலங்கை அணிக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக சசித்திர சேனநாயக்க சர்வதேச ரீதியில் போட்டிகளில் விளையாடி வருகின்றார். இதேவேளை இந்த தொடரில் நான்கு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த முறையீடு செய்யப்பட்டுள்ளமை அதிருப்தியளிக்கின்றது என  இலங்கை கிரிக்கெட் குறித்த முறையீடு தொடர்பாக தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. இருப்பினும் தொடரும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.

2011 ஆம் ஆண்டு இலங்கை A அணிக்கான தொடரின் போது இங்கிலாந்தில் வைத்து இதே குற்றம் சுமத்தப்பட்டது. அதன் பின்னர் பந்துவீச்சுப் பாணியில் மாற்றங்களை மேற்க்கொண்டு ஆஸ்திரேலியாவின் பேர்த்தில் பரிசோதிக்கப்பட்டு பந்து வீச அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .