.jpg)
உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் முதலாவது அரை இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது. பிரேசில், ஜேர்மனி அணிகள் இன்றைய போட்டியில் மோதவுள்ளன. இலங்கை நேரப்படி அதிகாலை 1.30 இற்கு இந்தப் போட்டி ஆரம்பிக்கவுள்ளது.
இரு அணிகளும் இதுவரை 21 போட்டிகளில் மோதியுள்ளன. இவற்றில் 12 போட்டிகளில் பிரேசில் அணியும், 5 போட்டிகளில் ஜேர்மனி அணியும் வென்றுள்ளன. 4 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன.
பிரேசில் அணி இதுவரை 10 தடவைகள் அரை இறுதிப் போட்டியில் விளையாடியுள்ளது. 7 தடவைகள் அரை இறுதிப் போட்டியில் வென்றுள்ளதோடு 3 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. ஜேர்மனி அணி 12 தடவைகள் அரை இறுதிப் போட்டியில் விளையாடியுள்ளது. இதில் 8 தடவைகள் வெற்றி பெற்றும் 4 தடவைகள் தோல்வியடைந்தும் உள்ளது. கடந்த 3 உலகக் கிண்ண தொடர்களிலும் ஜேர்மனி அணி அரை இறுதிப் போட்டியில் விளையாடியுள்ளது. தொடர்ச்சியான நான்காவது தடவையாக இம்முறை அரை இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது.
பிரேசில் அணி 2002ஆம் ஆண்டு உலகக்கிண்ண அரை இறுதிப் போட்டிக்குப் பின்னர் இம்முறை அரை இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது.