2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

உலகக்கிண்ணம்: குழு C, குழு D அணிகளின் இறுதி மோதல் இன்று

A.P.Mathan   / 2014 ஜூன் 24 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் குழு நிலைப் போட்டிகளின் இறுதிக்கட்டத்தின் இரண்டாம் நாள் போட்டிகள் இன்று இடம்பெறவுள்ளன. குழு C மற்றும், குழு D அணிகள் தங்கள் இறுதிக்கட்ட போட்டிகளில் விளையாடவுள்ளன. இலங்கை நேரபப்டி 9.30 இற்கு குழு D அணிகளான இத்தாலி - உருகுவே அணிகள் ஒரு போட்டியிலும், இங்கிலாந்து - கொஸ்டரிக்கா அணிகள் இன்னுமொரு போட்டியிலும் மோதவுள்ளன.
 
இத்தாலி - உருகுவே அணிகளுக்கிடையில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்றுக் கொள்ளும் அணி அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் அதேவேளை சமநிலையில் நிறைவடைந்தால் இத்தாலி அணி தெரிவாகும் அத்வேளை உருகுவே அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழக்கும். இரண்டு அணிகளும் இதுவரை தங்களுக்குள் 9 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் உருகுவே அணியும் 2 போட்டிகளில் இத்தாலி அணியும் வென்றுள்ள அதேவேளை 4 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன. 
 
இங்கிலாந்து - கொஸ்டரிக்கா அணிகளுக்கிடையில் குழு D இற்கான இரண்டாவது போட்டி நடைபெறவுள்ளது. இரு அணிகளும் முதற் தடவை மோதவுள்ளன. இங்கிலாந்து அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துள்ள நிலையிலும், கொஸ்டரிக்கா அணி அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ள நிலையிலும் இந்த போட்டி முக்கியத்துவத்தை இழந்துள்ளது. இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றிக்கு போராடும் அதேவேளை, கொஸ்டரிக்கா அணி முதலிடத்தை உறுதி செய்யவும், தொடர் வெற்றிகளை பெறவும் போராடும் என எதிர்பார்க்கலாம். 
 
அதிகாலை 01.30 இற்கு ஜப்பான் - கொலம்பியா அணிகளுக்கிடையில் குழு C இற்கான போட்டி  நடைபெறவுள்ளது. இரு அணிகளும் 2 தடவைகள் விளையாடி கொலம்பியா 1 வெற்றியை பெற்றுள்ளதோடு மற்றைய போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது. குழு C இல் கொலம்பியா அணி  அடுத்த சுற்று வாய்ப்பை பெற்றுள்ள நிலையில் ஜப்பான் அணி வெற்றி பெற்றாலே அடுத்த சுற்று வாய்ப்பை பெற முடியும். அதேவேளை ஐவரிகோஸ்ட் அணி கிரீஸ் அணியிடம் தோல்வியடைய வேண்டும் என்ற நிலையும் உள்ளது. கொலம்பியா அணி வெற்றி பெற்றால் அவர்களுக்கு முதலிடம் உறுதியாகும். சமநிலை முடிவே அவர்களுக்கு முதலிடத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
குழு C அணிகளான ஐவரிகோஸ்ட் - கிரீஸ் அணிகளுக்கிடையில் அதிகாலை 1.30 இற்கு போட்டி நடைபெறவுள்ளது. இரு அணிகளுக்கும் அடுத்த சுற்று வாய்ப்பு இருப்பதனால் இரு அணிகளும் போராடும். ஐவரிகோஸ்ட் அணிக்கு சமநிலை முடிவு அடுத்த சுற்று வாய்ப்பை வழங்கும். வெற்றி பெற்றால், மற்றைய அணியை தங்காமல் அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும். கிரீஸ் அணி வெற்றி பெற்றாலும், மற்றையா போட்டியின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். மிக அரிதான வாய்ப்பே கிரீஸ் அணிக்கு உள்ளது. இரு அணிக்களும் இதுவரை போட்டிகளில் மோதியதில்லை.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .