2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

"ஃபீபாவுக்கு புதியதொரு யுகம்"

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 28 , மு.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் (பீபா) தலைவராக, ஜியானி இன்பன்டினோ தெரிவுசெய்யப்பட்டமை குறித்து, நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அச்சம்மேளனத்தின் இழந்துபோயுள்ள நற்பெயரை, ஜியானி மீட்டுத் தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவரது தெரிவு குறித்துத் கருத்துத் தெரிவித்த நோர்வே கால்பந்தாட்டச் சம்மேளன முன்னாள் தலைவரும் பீபா முன்னாள் நிறைவேற்றுக் குழு உறுப்பினருமான பெர் றான் ஒம்டல், பீபா சந்திக்கும் பிரச்சினைகளுக்கு மத்தியில், இதுவொரு புதிய யுகமாக அமையுமெனத் தெரிவித்தார்.

கருத்துத் தெரிவித்த மற்றோர் உறுப்பினர், சர்ச்சைக்குரிய ஷேக் சல்மானைத் தெரிவுசெய்யாமை, சிறப்பான முடிவாக அமைந்ததெனத் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தேர்தலில், 115 வாக்குகளைப் பெற்ற ஜியானி, தலைவராகத் தெரிவாகியிருந்தார். ஷேக் சல்மான் 88 வாக்குகளையும் இளவரசர் அலி 4 வாக்குகளையும் பெற்றதோடு, ஜெரோம் சம்ப்பைனுக்கு, வாக்கேதும் கிடைத்திருக்கவில்லை.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .