Shanmugan Murugavel / 2016 ஜூன் 02 , மு.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பொட் பிக்சிங்கில் ஈடுபட்டமை நிரூபிக்கப்பட்டு, 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஆமிர், அவரது தடைக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகின்றமை, கிரிக்கெட்டுக்குச் சிறந்தது என, சர்வதேச கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி டேவிட் றிச்சர்ட்சன் தெரிவித்தார்.
ஏற்கெனவே, உலக இருபதுக்கு-20 தொடரில் பாகிஸ்தானுக்காகப் பங்குபற்றியிருந்த ஆமிர், அடுத்ததாக, இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள தொடருக்காகத் தெரிவாகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், ஸ்பொட் பிக்சிங் தொடர்பாக அவர், குற்றவியல் விசாரணைகளை எதிர்கொண்டு, அதில் குற்றவாளியாக இனங்காணப்பட்டிருந்தவர் என்ற அடிப்படையில், இங்கிலாந்து செல்வதற்கான விசா, அவருக்கு வழங்கப்படுமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. அத்தோடு, குற்றமிழைத்தவரான ஆமிர், கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்ற வேண்டுமா என, ஒரு தரப்பினர் கேள்வியெழுப்புகின்றனர்.
இந்நிலையில் கருத்துத் தெரிவித்த றிச்சர்ட்சன், ஒரு விடயத்தில் தண்டனை வழங்கப்பட்டு, அக்காலத்தை நிறைவுசெய்ய பின்னர், அது தொடர்பாகக் கருத்துத் தெரிவிப்பது சிறப்பானதன்று எனத் தெரிவித்தார். தனது தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ளுமாறு இளைய வீரர்களைக் கேட்டுக் கொண்டதன் மூலம், சிறந்த உதாரணமாக இருப்பதற்கு அவர் விரும்பியுள்ளார் என்பது தெரிவித்த டேவிட், அவர் மீண்டும் விளையாடுவது, சிறப்பானது எனவும் தெரிவித்தார். அத்தோடு, இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள தொடரில், ஆமிர் பங்குபற்றவில்லையெனில், தான் ஆச்சரியமடைவார்" எனவும் டேவிட் றிச்சர்ட்சன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .