2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

3ஆவது டெஸ்ட் நாளை ஆரம்பிக்கின்றது

Shanmugan Murugavel   / 2016 ஜனவரி 13 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3ஆவது போட்டி, நாளை ஆரம்பிக்கவுள்ளது. ஜொஹன்னர்ஸ்பேர்க்கில் இடம்பெறவுள்ள இப்போட்டி, இலங்கை நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

இத்தொடரின் முதலாவது போட்டியில் இங்கிலாந்து அணி சிறப்பான வெற்றியைப் பெற்றுக்கொண்ட போதிலும், இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்க அணி, சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியதோடு, இங்கிலாந்து அணிக்கு அழுத்தத்தை வழங்கியிருந்தது.

அப்போட்டி முடிவில், அணித்தலைமையிலிருந்து ஹஷிம் அம்லா விலகியிருந்த நிலையில், புதிய தலைவராக, ஏபி டி வில்லியர்ஸ் செயற்படவுள்ளார். ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 76 போட்டிகளிலும் இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் 15 போட்டிகளிலும் தலைமை வகித்துள்ள போதிலும், டெஸ்ட் போட்டிகளில் அவர் தலைமை வகிக்கவுள்ள முதலாவது போட்டியாக, இப்போட்டி அமையவுள்ளது.

இப்போட்டியில், தென்னாபிரிக்காவின் முதன்மை வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெய்ன் பங்குபற்ற மாமட்டார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சவாலான நிலையிலேயே, தனது அணித்தலைமை அறிமுகத்தை, வில்லியர்ஸ் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .