Shanmugan Murugavel / 2016 ஏப்ரல் 04 , மு.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேர் செட்களில் உலகின் ஆறாம் நிலை வீரரான ஜப்பானின் கெய் நிஷிகோரியை வீழ்த்திய உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரரான சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச், மியாமி பகிரங்கப் பட்டத்தை ஆறாவது தடவையாக கைப்பற்றினார்.
ஒரு மணித்தியாலம் 26 நிமிடங்கள் நீடித்த இறுதிப் போட்டியில் 6-3, 6-3 என்ற செட் கணக்கில் கெய் நிஷிகோரியை 28 வயதான நொவக் ஜோக்கோவிச் தோற்கடித்தார்.
மியாமி பகிரங்கத் தொடர் வரலாற்றில், இதற்கு முன்னர் ஐக்கிய அமெரிக்கரான அன்றே அகாசியே ஆறு தடவைகள் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.
மேற்படி மியாமி பகிரங்கப்பட்டத்தை கைப்பற்றியதுடன், அதிக மாஸ்ட்டேர்ஸ் தொடர் வெற்றிகளை வாழ்நாளில் வென்றவர்களின் பட்டியலில் ஸ்பெயினின் ரஃபேல் நடாலை முந்தினார். தற்போது, மாஸ்ட்டேர்ஸ் தொடர்களில் 28 வெற்றிகளை நொவக் ஜோக்கோவிச் பெற்றுள்ளார்.
இதேவேளை மேற்படி வெற்றியுடன், அதிக பரிசுப் பணத்தொகையிலிலும் ரொஜர் பெடரரை முந்தி, இதுவரையிலும் 98.2 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைச் சேர்த்துள்ளார்.
34 minute ago
39 minute ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
39 minute ago
3 hours ago
5 hours ago