Shanmugan Murugavel / 2016 மே 15 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் புதிய தலைவரைத் தெரிவுசெய்வதற்கான விசேட பொதுக்குழுக் கூட்டம், எதிர்வரும் 22ஆம் திகதி மும்பையில் இடம்பெறவுள்ளது.
இதுவரை காலமும் தலைவராக இருந்த ஷஷாங் மனோகர், தனது பதவியிலிருந்து விலகி, சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தவிசாளராகப் பதவியேற்றுள்ள நிலையில், ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பவே, இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில், அச்சபையின் தற்போதைய செயலாளரான அநுரக் தாக்கூர், புதிய தலைவராகத் தெரிவாகுவதற்கான அதிக வாய்ப்புகளைக் கொண்டவராகக் கருதப்படுகிறார்.
புதிய தலைமைப் பதவிக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கான இறுதித் திகதி, மே 21 ஆகும். அவ்வாறு அத்தேர்தலில் போட்டியிடுவதற்கு தாக்கூர் முடிவு செய்வாராயின், செயலாளர் பதவியிலிருந்து அவர் பதவி விலக வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .