Shanmugan Murugavel / 2016 ஜூன் 06 , மு.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
தான் இறப்பதற்கு முன், கடந்த ஆண்டு, குத்துச்சண்டை ஜாம்பவானான முஹம்மது அலி கஷ்டமான நேரத்தைக் கொண்டிருந்ததாக அவரின் வைத்தியர் தெரிவித்துள்ளார்.
32 வருடமாக பார்க்கின்ஸன் நோயைக் கொண்டிருந்த, மூன்று தடவை, உலக அதிபாரச் சம்பியனான அலி, கண்டுபிடிக்க முடியாத இயற்கைக் காரணங்களால் ஏற்பட்ட நச்சூட்டு அதிர்ச்சியினால், தனது 74ஆவது வயதில் மரணமடைந்ததாக அவரின் குடும்பத்தால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அலி இறப்பதற்கு முந்தைய மணித்தியாலங்களில் அவருடன் இருந்த ஏப்ரஹாம் லிபர்மன், கடந்த வாரம் அலிக்கு மிகவும் கடினமாய் அமைந்திருந்ததாக கூறிய அவர், கடவுளுக்கு அலி வேண்டுமென்பது வெளிப்படையானது எனவே தாங்கள் அனைவரும் அதை ஏற்றுக் கொண்டிருந்தோம் எனத் தெரிவித்தார்.
அலியினுடைய பார்க்கின்ஸன் மிகவும் மோசமடைந்ததாகவும் எனினும் அவரது மிகவும் பக்தி வாய்ந்த குடும்பம், அவரை பொக்கிஷமாகப் பாதுகாத்ததாகவும், உங்களுக்கு கிடைக்கைக்கூடியளவு அதிக தரமான வாழ்க்கையை வழங்கியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அரிசோனாவிலுள்ள முஹம்மது அலி பார்க்கின்ஸன் நிலையத்தின் பணிப்பாளரான லிபர்மன், குத்துச்சண்டை மட்டுமே அலியின் நோய்க்கு காரணம் என்றவாறான கருத்துக்களை நிராகரித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .