Shanmugan Murugavel / 2016 ஜனவரி 14 , மு.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் மார்ச் மாதம் ஆரம்பிக்கவுள்ள உலக இருபதுக்கு-20 தொடருக்கான இந்தியக் குழாமில் தெரிவாகுவதே தனது இலக்கு என, அவ்வணியின் சிரேஷ்ட பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாகத் தேசிய அணிக்காகத் தெரிவு செய்யப்பட்டிருக்காத அவர், அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றுவதற்காகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2, 3 வருடங்களாக, இந்திய அணிக்காகத் தெரிவுசெய்யப்படாமை ஆச்சரியம் தந்ததாகக் குறிப்பிட்ட நெஹ்ரா, ஆனால், இல்லாமலிருப்பதை விட பிந்திக் கிடைப்பது சிறப்பானது எனத் தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவில் விளையாடி, பின்னர் உலக இருபதுக்கு-20 தொடரில் சிறப்பாகச் செயற்பட்டால், இதற்கு முன்னரே தான் தெரிவுசெய்யப்பட்டிருக்க வேண்டுமெனத் தெரிவிப்பார்கள் எனவும், சிறப்பாகச் செயற்படாவிட்டால், தான் தெரிவுசெய்யப்படாமை சரியானது எனவும் தெரிவிப்பார்களெனவும் தெரிவித்த நெஹ்ரா, இந்தியாவில் அவ்வாறே இடம்பெறுவதாகத் தெரிவித்தார்.
உலக இருபதுக்கு-20 தொடரில் சிறப்பாகச் செயற்பட எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த நெஹ்ரா, அவுஸ்திரேலியத் தொடரில், இந்தியாவின் இளைய பந்துவீச்சாளர்களுக்கு வழிகாட்டியாகச் செயற்பட எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .