2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

2026 உலகக் கிண்ணம்: அமெரிக்காவுக்கு உத்தரவாதமில்லை

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 29 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் (பீபா) தேர்தலில் வெற்றிபெற்ற ஜியானி இன்பான்டினோ, 2026ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை அமெரிக்காவுக்கு வழங்குவதற்கு உத்தரவாதம் வழங்கப்பட்டிருக்கவில்லை எனத் தெரிவித்தார்.

இவ்வாக்கெடுப்பின் இரண்டாம் சுற்று வாக்கெடுப்பில், ஜியானிக்கு ஆதரவாக அமெரிக்கா வாக்களித்தது. முதலாவது சுற்றில் அமெரிக்காவின் வாக்கு, இளவரசர் அலி பின் அல் ஹூஸைனுக்குச் சென்றிருந்தது.

இரண்டாவது சுற்றில் ஜியானிக்கு 27 மேலதிக வாக்குகள் கிடைத்திருந்ததோடு, ஷேக் சல்மானுக்கு மூன்று வாக்குகள் மாத்திரமே கிடைத்திருந்தன.

இந்நிலையில், 2026ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை அமெரிக்காவுக்கு வழங்குவதாக உத்தரவாதமளித்தே, அமெரிக்காவின் வாக்கை அவர் பெற்றுக் கொண்டார் என சில செய்திகள் வெளியாகியிருந்தன. அவற்றை மறுத்த அவர், அவ்வாறான எந்தவோர் உத்தரவாதமும் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .