Shanmugan Murugavel / 2016 ஏப்ரல் 12 , பி.ப. 01:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் குசால் ஜனித் பெரேரா, இன்னமும் தடைக்குள்ளாக்கப்படவில்லை என, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார். குசால் பெரேரா தடை செய்யப்பட்டுள்ளார் என முன்னர் செய்தி வெளியாகியிருந்த நிலையிலேயே, இந்தத் தகவலை மஹேல ஜெயவர்தன வெளியிட்டுள்ளார்.
தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்தைப் பயன்படுத்தியமை காரணமாக சர்வதேச கிரிக்கெட் சபையின் விசாரணைகளுக்கு முகங்கொடுத்துவரும் குசால் ஜனித் பெரேரா, டிசெம்பர் 7ஆம் திகதி, இடைக்காலத் தடைக்குள்ளாக்கப்பட்டார். எனினும், ஏனையோரைப் போலன்றி, குசால் பெரேராவின் விசாரணை தொடர்பான முடிவு, இதுவரை வெளிவரவில்லை.
இந்நிலையில், நேற்று கருத்துத் தெரிவித்திருந்த விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, இடைக்காலத் தடைக்குள்ளாக்கப்பட்டுள்ள குசால் பெரேராவுக்கு, நான்கு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார். எனினும், இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் சபையோ அல்லது சர்வதேச கிரிக்கெட் சபையோ உத்தியோகபூர்வமாகக் கருத்துத் தெரிவித்திருக்கவில்லை.
இச்செய்தி வெளியானதைத் தொடர்ந்து, குசால் பெரேராவைத் தொடர்புகொண்ட மஹேல ஜெயவர்தன, இது தொடர்பாக அவரைக் கேட்டு, தனது டுவிட்டர் பக்கம் மூலமாகத் தகவல் வழங்கினார். அதன்போது மஹேல, 'குசாலுடன் கதைத்தேன். அவர் இடைக்காலத் தடைக்குள்ளாக்கப்பட்டுள்ளார். மே மாதத்தில் உத்தியோகபூர்வ விசாரணை இடம்பெறவுள்ளது. அவரது எதிர்காலம் தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் சபை முடிவுசெய்யும். குசாலின் கருத்தின்படி, அவர் இன்னமும் தடைக்குள்ளாக்கப்படவில்லை" என்றார்.
இதன்காரணமாக, குசால் பெரேராவின் தடை அல்லது இமைக்காலத் தடை தொடர்பான மர்மம், தொடர்ந்தும் நீடிக்கிறது.
24 minute ago
30 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
30 minute ago
1 hours ago
1 hours ago