Shanmugan Murugavel / 2016 மே 12 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட் சபையின் முதலாவது சுயாதீன தவிசாளராக, அப்பதவிக்கு தனித்துப் போட்டியிட்ட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் பதவியிலிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை (10) இராஜினாமாச் செய்த ஷஷாங் மனோகர், எந்தவித எதிர்ப்புமின்றி தெரிவானார். தற்போதிலிருந்து உடனடியாக அமுலுக்கு வரும் ஊதியமில்லாத இப்பதவியில் இரண்டு வருடங்களுக்கு மனோகர் அமரவுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் சபையின் புதிய நெறிமுறைகளின்படி அதன் தலைவர், எந்தவொரு நாட்டின் தேசிய கிரிக்கெட் சபையின் எந்தப் பதவிகளையும் வகிக்க முடியாது என்ற நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ததன் மூலமே சர்வதேச கிரிக்கெட் சபையின் தவிசாளர் பதவிக்கு போட்டியிடக் கூடியதாக மாறியிருந்தார். எனினும் சர்வதேச கிரிக்கெட் சபையின் தவிசாளர் தேர்தலானது தனது இராஜினாமாவில் தாக்கம் செலுத்தவில்லை என மனோகர் தெரிவித்திருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .