2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

'தொடரிலிருந்து விலகுகின்றமை மிகவும் வருத்தமளிக்கிறது'

Shanmugan Murugavel   / 2016 மே 25 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியின்போது காயமடைந்த இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ், இத்தொடரிலிருந்து விலகுகின்றமை, மிகவும் வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

முதலாவது போட்டியில் பந்துவீசும் போது அவரது இடது முழங்காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக அவர் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்படவுள்ளதோடு, ஆறு வாரங்களுக்குப் போட்டிகளில் பங்குபற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தனக்கு ஏற்பட்ட இந்த உபாதை, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாகக் காணப்பட்டதாகத் தெரிவித்த அவர், அதற்கு மத்தியிலேயே விளையாடி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர், இருபதுக்கு-20 சர்வதேசத் தொடர் ஆகியவற்றிலும் பங்குபற்ற முடியாத பென் ஸ்டோக்ஸ், அதன் பின்னர் பாகிஸ்தானுக்கெதிராக இடம்பெறவுள்ள தொடரில் பங்குபற்ற எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .