2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

நியூசிலாந்திடம் தோற்றது இலங்கை

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 10 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, இலங்கை மகளிர் அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் நான்காவது போட்டியிலும், இலங்கை அணி தோல்வியடைந்தது.

லிங்கொனில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 46.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 126 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. ஒரு கட்டத்தில், 27.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 86 ஓட்டங்களுடன் காணப்பட்ட அவ்வணி, அதன் பின்னர் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது.

துடுப்பாட்டத்தில், சாமரி அத்தப்பத்து 56 (89), அம காஞ்சனா 31 (37), நிபுணி ஹன்சிகா 15 (34) ஓட்டங்களைப் பெற்றனர். ஏனையோரில், 4 ஓட்டங்களே அடுத்த அதிகபட்ச ஓட்டங்களாக இருந்தன.

பந்துவீச்சில், மோர்னா நீல்சன் 5, சோபி டெவைன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

127 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, 18.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில், சுசி பேட்ஸ் 70 (51), அமி சட்டெர்த்வைட் 49 (60) ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றனர்.
இதன்படி நியூசிலாந்து அணி, 4-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .