2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

நியூசிலாந்துத் தொடரில் குழப்பம் குறித்து விசாரணை: ஜயசேகர

Shanmugan Murugavel   / 2016 ஜனவரி 13 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் நியூசிலாந்துத் தொடரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் குழப்பங்கள் குறித்து, விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தொடரின் போது, மதுபானப் பாவனையும் சிறிய முரண்பாடுகளும் இடம்பெற்றதாகக் குற்றச்சாட்டுகள் இடம்பெற்றதாகக் கூறப்பட்ட நிலையிலேயே, இத்தகவலை அவர் வெளியிட்டார்.

நியூசிலாந்துக்கெதிரான முக்கியமான போட்டிகளுக்கு முன்னதாக, இரவுமுழுதும் நீடித்த மதுபானக் களியாட்டங்களில் வீரர்கள் பங்கேற்றமைக்கான புகைப்படங்கள், தன்னிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

'மோசமான நடத்தைகள் இடம்பெற்றன. அதிகாலை 3, 4 மணிவரை மதுபானத்துடன் கூடிய களியாட்டங்களுக்கு அவர்கள் சென்றுள்ளது மாத்திரமன்றி, அணி வீரர்களிடையே முரண்பாடுகளும் முறுகல்களும் காணப்பட்டுள்ளன" என அவர் குறிப்பிட்டார்.

'என்னுடைய பிரதான கவனம் என்னவெனில், நடத்தைக் குறைபாடு. அது பாதிக்கப்படும்போது, அணி மோசமாகச் செயற்படும்" என அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கை அணி, டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்ததோடு, 1-3 என்ற கணக்கில் இழந்திருந்தது. அடுத்து, இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் முதலிடத்தில் காணப்பட்ட இலங்கை, அத்தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்து, முதலிடத்தையும் இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .