2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

நாளை ஆரம்பிக்கிறது தென்னாபிரிக்கா-இங்கிலாந்து ஒ.நா.ச.போ தொடர்

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 02 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, டெஸ்ட் தொடரை, 2க்கு 1 என்ற ரீதியில் கைப்பற்றியிருந்த நிலையில், ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டித் தொடர், இலங்கை நேரப்படி மாலை ஐந்து மணிக்கு நாளை ஆரம்பிக்கவுள்ளது.  

டெஸ்ட் தொடரின் ஆரம்பத்தில் தடுமாறியிருந்த தென்னாபிரிக்க அணி, இறுதிக் கட்டத்தில் சிறப்பாக விளையாடியிருந்தது மட்டுமல்லாமால், தாம் இறுதியாக பங்கேற்ற ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் இந்தியாவை வென்றும் இருந்தது. எனவே அவ்வணி இத்தொடரை மறுபுறம் வெல்லக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.

மறுபுறத்தில், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், டெஸ்ட் போட்டியை விட ஓரளவு மாறுபட்ட அணியாக களமிறங்கவுள்ள இங்கிலாந்து ஒருநாள் சர்வதேசப் போட்டி அணியும் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியுள்ளதால், சிறந்த போட்டியை தென்னாபிரிக்காவுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் தென்னாபிரிக்க அணி- குவான்டன் டீ கொக், ஹஷிம் அம்லா, பப் டூ பிலிசிஸ், ஏ‌.பி.டீவில்லியர்ஸ் (தலைவர்), டேவிட் மில்லர், ஜெ.பி.டுமினி, பர்கான் பெகாத்ரீன், கைல் அபோட், கஜிஸ்கோ ரபடா, மோர்னே மோர்கல், இம்ரான் தாகீர்

எதிர்பார்க்கப்படும் இங்கிலாந்து அணி- அலெக்ஸ் ஹேல்ஸ், மொயின் அலி, ஜோ ரூட், ஒயின் மோர்கன் (தலைவர்), ஜேம்ஸ் டெய்லர், ஜேம்ஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், அடில் ரஷீட், கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, ஸ்டூவர்ட் புரோட்  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .