Shanmugan Murugavel / 2016 ஜனவரி 31 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடம்பெற்றுவரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணப் போட்டிகளில், இன்று இடம்பெற்ற போட்டிகளில், நமீபிய, இங்கிலாந்து, பங்களாதேஷ், மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் வெற்றிபெற்றன.
நமீபிய அணிக்கும் நடப்புச் சம்பியன்களான தென்னாபிரிக்க அணிக்குமிடையிலான போட்டியில், நமீபிய அணி 2 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. இந்தத் தோல்வியுடன், இந்த உலகக் கிண்ணத்திலிருந்து தென்னாபிரிக்கா வெளியேற்றப்பட்டது.
தென்னாபிரிக்கா: 136/9 (50 ஓவ.) (வில்லியம் லுடிக் 42 (98). பந்துவீச்சு: மைக்கல் வான் லிங்கென் 10-2-24-4, பிறிட்ஸ் கோட்ஸே 10-4-16-3.)
நமீபியா: 137/8 (39.4 ஓவ.) (லொஹான் லௌரன்ஸ் 58 (97). பந்துவீச்சு: ஸியாட் ஏப்ரஹாம்ஸ்; 8.4-3-18-2, ஸீன் வைட்ஹெட்; 7-0-27-2.
இங்கிலாந்து, சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான போட்டியில், இங்கிலாந்து அணி 129 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இங்கிலாந்து: 288/4 (50 ஓவ.) (ஜக் பேர்ஹம் 106 (104), டான் லோரன்ஸ் 59 (67), மக்ஸ் ஹோல்டென் 51 (90). பந்துவீச்சு: றுகாரே மகரிரா 10-0-36-2.)
சிம்பாப்வே: 159/10 (43.4 ஓவ.) (ஜேர்மி ஐவீஸ் 91 (132), பந்துவீச்சு: சகீப் மஹ்மூட்9.4-2-39-4.)
பங்களாதேஷ் அணிக்கும் ஸ்கொட்லாந்து அணிக்குமிடையிலான போட்டியில், இத்தொடரை நடத்தும் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றது.
பங்களாதேஷ்: 256/6 (50 ஓவ.) (நஸ்முல் ஹொஸைன் ஷான்டோ ஆட்டமிழக்காமல் 113 (117), மெஹெடி ஹஸன் 51 (48), சாய்ப் ஹஸன் 49 (108). பந்துவீச்சு: மொஹமட் காபர் 10-0-60-4.)
ஸ்கொட்லாந்து: 142/10 (47.2 ஓவ.) (அஸீம் டார் 50 (89). பந்துவீச்சு: மொஹம்மட் ஸைப்புட்டின் 7.2-0-17-3, சாலே அஹ்மட் ஷவோன் 10-2-27-3, அரிபுல் இஸ்லாம் 10-0-28-2.)
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் பிஜி அணிக்குமிடையிலான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி, 262 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
மேற்கிந்தியத் தீவுகள்: 340/7 (50) (ஷமர் ஸ்பிறிங்கர் 106 (109), கிட்ரோன் போப் 76 (77), ஜைட் கூலி 66 (75). பந்துவீச்சு: சக்கக்வா டிகோய்சுவா 10-0-59-6)
பிஜி: 78/10 (27.3) (பெனி வுனிவக்கா 29 (49). பந்துவீச்சு: சக்கக்வா டிகோய்சுவா 10-0-59-6, பந்துவீச்சு: ஜிட்ரோன் போப் 7-2-24-4, அல்ஸாரி ஜோசப் 7-1-15-3, கிறிஸ்டன் காளிசரண் 6.3-1-21-2.)
34 minute ago
45 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
45 minute ago
1 hours ago
2 hours ago