Shanmugan Murugavel / 2016 ஏப்ரல் 26 , மு.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச ரீதியான தொடர்களை நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு, தென்னாபிரிக்காவின் கிரிக்கெட், றக்பி, தடகள, வலைப்பந்தாட்டச் சங்கங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவின் விளையாட்டமைச்சர் பிகிலே எம்.பலுலாவினாலேயே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் கறுப்பின வீரர்களுக்கான போதுமான வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு இச்சபைகள் தவறிய நிலையிலேயே, இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடை, ஓர் ஆண்டுக்குக் காணப்படுமெனவும் அதன் பின்னர் மீளாய்வுக்கு உட்படுத்தப்படுமெனவும் அறிவிக்கப்படுகிறது.
நாட்டின் பிரதான ஐந்து விளையாட்டுகளின் சங்கங்கள், நாட்டில் இனரீதியாக மாற்றங்கள் பலவற்றுக்கு ஒப்புக்கொண்ட போதிலும், கால்பந்தாட்டம் மாத்திரமே அந்த இலக்கை அடைந்துள்ளதன் காரணமாகவே, ஏனைய சங்கங்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது.
தென்னாபிரிக்காவின் ஏறத்தாழ 80 சதவீத கறுப்பினத்தவர்களும் தலா 9 சதவீதமாக வெள்ளையினத்தவரும் நிறப்பிரிவினரும் உள்ள நிலையில், தேசிய அணிகளில் குறைந்தது 60 சதவீதம் பேர் நிறப்பிரிவினராக இருக்க வேண்டுமென்பது, விதிக்கப்பட்ட நிபந்தனைகளில் ஒன்றாகும். கிரிக்கெட்டில், 55 சதவீதம் மாத்திரமே நிறப்பிரிவினராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
29 minute ago
35 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
35 minute ago
1 hours ago
2 hours ago