2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

பெண்களுக்கான முதலாவது பிக் பாஷ் பட்டத்தை கைப்பற்றியது தண்டேர்ஸ்

Shanmugan Murugavel   / 2016 ஜனவரி 24 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவின் உள்ளூர் இருபதுக்கு-20 தொடரான பிக் பாஷ் லீக்கில், இப்பருவகாலத்தில் முதன்முறையாக பெண்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட தொடரில் சிட்னி தண்டேர்ஸ் சம்பியனாகியுள்ளது. இறுதிப்போட்டியில், சிட்னி சிக்ஸேர்ஸை வெற்றி கொண்டே அவ்வணி சம்பியனாகியிருந்தது.

இப்போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற சிக்சேர்ஸின் தலைவி எல்ஸி பெரி, தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார். அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிக்சேர்ஸ், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 115 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், அவ்வணி சார்பாக அஞ்செலா ரீக்ஸ் 23 (18), அஷ்லெய் கார்ட்னர் 20 (16), சாரா மக்கிலஷன் 20 (21) ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் தண்டேர்ஸ் சார்பாக எரின் ஒஸ்போர்ன் 3, மெய்ஸி கிப்சன், றெனி பரெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பதிலுக்கு 116 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தண்டேர்ஸ், 19.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக,  ரேச்சல் ஹெய்ன்ஸ் 37 (50), தலைவி அலெக்ஸ் பிளக்வெல் 30 (23), ஸ்டெபனி டெய்லர் 27 (35) ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் சிக்ஸேர்ஸ் சார்பாக,  சாரா அலே 2, மரிஸன்னே கப், எல்ஸி பெரி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இவ் இறுதிப்போட்டியின் நாயகியாக தண்டேர்ஸின் எரின் ஒஸ்போர்னும் இத்தொடரின் நாயகியாக மெல்பேர்ண் ஸ்டார்ஸின் மெக் லன்னிங்கும் தெரிவாகினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .