2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

3,000 மீற்றரில் மோ பரா வெற்றி

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 21 , மு.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவின் மோ பரா, இவ்வருடத்தின், தனது முதலாவது வெற்றியை கிளாஸ்கோ உள்ளக கிரான்ட் பீறிக்ஸில் பெற்றுள்ளார்.

இரண்டு தடவை உலக சம்பியனும் ஒலிம்பிக் சம்பியனுமான 32 வயதான பரா, போட்டித் தூரத்தை ஏழு நிமிடங்கள் 39.55 செக்கன்களில் ஓடி வெற்றி பெற்றிருந்தார். இவருக்கு, கடுமையான போட்டியை வழங்கிய கென்யாவின் ஒகஸ்டின் ஷோகி, ஏழு நிமிடங்கள் 40.66 செக்கன்களில் ஓடி, இரண்டாமிடத்தையும் பெற்றிருந்தார்.

அடுத்த மாதம் ஒரிகனில் இடம்பெறவுள்ள, உலக உள்ளூர் சம்பியன்ஷிப் போட்டிகளை பரா தவறவிடவுள்ள நிலையில், இப்பந்தயமானது, கலவையான திறமை வெளிப்பாடாக அமைந்தததாகவும் ஆரம்பத்தில் வேகமானதாக காணப்பட்டதாகவும், எனினும் இரண்டு கிலோமீற்றர் தூரத்தை கடந்த பின், எங்களது வேகம் குறைவடைந்ததாகவும் ஆனாலும் சொந்த நாட்டு மக்களின் முன்னிலையில் பந்தயத்தில் வெற்றி பெற முயற்சித்ததாகவும் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .