2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

மன்செஸ்டர் சிற்றி வெற்றி

Shanmugan Murugavel   / 2016 ஜனவரி 17 , மு.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் கடந்த சனிக்கிழமை (16) இடம்பெற்ற போட்டிகளில் மன்செஸ்டர் சிற்றி, பௌர்ண்மௌத், டொட்டென்ஹாம், நியூகாசில், சௌதாம்டன் ஆகிய அணிகள் வெற்றி பெற்றதுடன் செல்சி, எவெர்ற்றன் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியும் லெய்செஸ்டர், அஸ்டன் வில்லா அணிகளுக்கிடையிலான போட்டியும் சமநிலையில் முடிவடைந்திருந்தது.

இதில், மன்செஸ்டர் சிற்றி, கிறிஸ்டல் பலஸ் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், சிற்றி, 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதில், சேஜியோ அக்ரோ இரண்டு கோல்களையும் பபியான் டெல்ப், டேவிட் சில்வா ஆகியோர் தலா ஒவ்வொரு கோல்களையும் பெற்றிருந்தனர். இந்த வெற்றியுடன் 43 புள்ளிகளைப் பெற்றுள்ள சிற்றி, பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள லெய்செஸ்டரை விட ஒரு புள்ளியே பின்தங்கியுள்ளது.

இதேவேளை, செல்சி, எவெர்ற்றன் அணிகளுக்கிடையிலான போட்டியில் எதிரணிக்கு ‘ஒவ்ண் கோல்’ முறையில் முன்னிலை பெற்றுக் கொடுத்த ஜோன் டெரி, பின்னர் போட்டியின் 98ஆவது நிமிடத்தில், தெளிவாக ‘ஒவ் சைட்’இல் பெற்ற சர்ச்சைக்குரிய கோல் காரணமாக போட்டி, 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. டெரி தவிர செல்சியில் டியகோ கோஸ்டா, சீஸ்க் பப்ரிகாஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்றிருந்ததோடு, எவெர்ற்றன் சார்பாக கெவின் மிரல்லஸ், ரமிரோ புனேஸ் மொரி தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்றிருந்தனர்.

மறுபக்கம், அஸ்டன் வில்லா அணியுடன் 1-1 என்ற கோல் கணக்கில் போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்ட லெய்செஸ்டர், பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்துக்கு திரும்பியுள்ளது. தவிர, டொட்டென்ஹாம், 4-1 என்ற கோல் கணக்கில் சந்தர்லேண்டை தோற்கடித்ததுடன், பௌர்ண்மௌத், 3-0 என்ற கோல் கணக்கில் நோர்விச்சை தோற்கடித்ததுடன், நியூகாசில், 2-1 என்ற கோல் கணக்கில் வெஸ்ட் ஹாமை தோற்கடித்ததுடன், சௌதாம்டன், 3-0 என்ற கோல் கணக்கில் வெஸ்ட் புரோமையும் தோற்கடித்திருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .