Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 21 , பி.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டின் பயிற்சியாளரான லூயிஸ் வான் காலை, செல்சியின் முன்னாள் பயிற்சியாளரான ஜொஸ் மொரின்ஹோ பிரதியீடு செய்வார் என இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகமான இன்டர் மிலன் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இன்டர் மிலன் பயிற்சியாளராகவும் முன்னர் பணிபுரிந்த ஜொஸ் மொரின்ஹோவை உணவகமொன்றில் சந்தித்து விட்டு வெளியேறும் போதே, இன்டர் மிலன் கழகத்தின் முன்னாள் தலைவரான மஸ்ஸிமோ மொரட்டியின் சகோதரியான பெடி மொராட்டியே, மேற்படிக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஒரு மனிதராக, மொரின்ஹோ தவறவிடப்படுவதாகவும் ஆனால் தற்சமயம் அவர், மகிழ்ச்சியாக உள்ளதாகவும் அவர் மன்செஸ்டருக்கு செல்லவுள்ளதாகவும் மொரட்டி மேலும் தெரிவித்தார்.
கடந்த வியாழக்கிழமை (18), இடம்பெற்ற ஐரோப்பா லீக் போட்டியில், மிட்டிலாண்ட் அணிக்கெதிராகவும் மன்செஸ்டர் யுனைட்டெட் தோல்வியடைந்த நிலையில், மன்செஸ்டர் யுனைட்டெட் அணியின் பயிற்சியாளர் லூயிஸ் வான் கால் மீதான அழுத்தம், மேலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
29 minute ago
57 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
57 minute ago
2 hours ago
2 hours ago