Editorial / 2025 நவம்பர் 21 , பி.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் மிகவும் பிரபலமான ஆஷஸ் தொடர் வருகிற 21-ந் திகதி தொடங்கியது உள்ளது. இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் வெள்ளிக்கிழமை (21) தொடங்கியது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 172 ஓட்டங்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 123 ஓட்டங்களை எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்நிலையில் 100 ஆண்டுகால ஆஷஸ் டெஸ்ட் தொடர் வரலாற்றில் முதல் நாள் ஆட்டத்தில் (Eng 10, Aus 9) என்பதுடன் 19 விக்கெட்டுகளை இழப்பது இதுவே முதல் முறை.
இதற்கு முன்னதாக 2001-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் (Eng 10, Aus 7) என்பதுடன் 17 விக்கெட்டுகள் இழந்தது அதிகபட்சமாக இருந்தது.
மேலும் பெர்த் மைதானத்தில் முதல் நாளில் 19 விக்கெட்டுகளை இழப்பது இதுவே முதல்முறை. இதற்கு முன்பு 2024-ம் ஆண்டு இந்தியா- ஆஸ்திரேலியா போட்டியில் 17 விக்கெட்டுகளை இழந்ததே அதிகபட்சமாக இருந்தது.
5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago