2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

சங்காவின் 11ஆவது இரட்டைச் சதம்

A.P.Mathan   / 2015 ஜனவரி 04 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 11ஆவது இரட்டைச் சதத்தினை இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார, இன்று பெற்றுக் கொண்டார். 
 
இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, நேற்று வெலிங்டனில் ஆரம்பமாகியது. இப்போட்டியில் 203 ஓட்டங்களைப் பெற்று ஜேம்ஸ் நீஸமின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

தனது 130ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிவரும் சங்கக்கார, 224ஆவது இனிங்ஸில் 203 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். இதன்மூலம், 12,198 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். டெஸ்ட் வரலாற்றில், 38 சதங்கள், 51 அரைச்சதங்களை குவித்துள்ளார் சங்கா. டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்தவர்கள் வரிசையில், உலகில் 5ஆவது இடத்தில் சங்கா இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

  • ravi Sunday, 04 January 2015 10:01 PM

    good

    Reply : 0       0

    s.nirmalan Tuesday, 06 January 2015 03:45 AM

    super play.god bless you

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .