2025 நவம்பர் 05, புதன்கிழமை

14ஆவது தடவையாக உலக சாதனையை முறியடித்த டுப்லான்டிஸ்

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 16 , பி.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகத் தடகளச் சம்பியன்ஷிப்பில் தனது தொடர்ச்சியான மூன்றாவது பட்டத்தை வென்ற சுவீடனின் அர்மன்ட் டுப்லான்டிஸ் கோலூன்றிப் பாய்தலில் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து செலுத்தி தனது இறுதி வாய்ப்பில் 14ஆவது தடவையாக உலக சாதனையை முறியடித்தார்.

ஜப்பானின் டோக்கியோவில் திங்கட்கிழமை (15) 6.30 மீற்றரை 25 வயதான டுப்லான்டிஸ் கடந்திருந்தார்.  இறுதியாக கடந்த மாதம் ஹங்கேரியின் புடாபெஸ்டில் 6.29 மீற்றர் டுப்லான்டிஸ் பாய்ந்திருந்தார்.

இப்போட்டியில் இரண்டாமிடத்தை 6 மீற்றர் கடந்த கிரேக்கத்தின் எம்மனூயில் கரலிஸ் பெற்றதோடு, 5.95 மீற்றர் தாண்டிய அவுஸ்திரேலியாவின் கேர்டிஸ் மார்ஷல் மூன்றாமிடத்தைப் பெற்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X