Shanmugan Murugavel / 2024 நவம்பர் 04 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரேஸிலிய குரான் பிறீயானது ஞாயிற்றுக்கிழமை (03) நடைபெற்ற நிலையில், பந்தயத்தை 17ஆவது இடத்திலிருந்து ஈரமான ஓடுதளத்தில் ஆரம்பித்த நடப்புச் சம்பியனான மக்ஸ் வெர்ஸ்டப்பன், பல்வேறு சம்பவங்களுக்குப் பின்னர் அபாரமாக முதலாமிடத்தைப் பிடித்தார்.
பந்தயத்தை நான்காமிடத்திலிருந்து ஆரம்பித்த அல்பைன் அணியின் எஸ்டெபன் ஒக்கோன் இரண்டாமிடத்தைப் பெற்றதோடு, பந்தயத்தை 13ஆம் இடத்திலிருந்து ஆரம்பித்த ஒக்கோனின் சக அணி வீரரான பியரி கஸ்லி மூன்றாமிடத்தைப் பெற்றார்.
அந்தவகையில் இவ்வாண்டுக்கான போர்மியுலா வண் சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 393 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் றெட் புல் அணியின் வெர்ஸ்டப்பன் காணப்படுகின்றார். 331 புள்ளிகளுடன் மக்லரென் அணியின் லான்டோ நொரிஸ் காணப்படுவதோடு, 307 புள்ளிகளோடு பெராரி அணியின் சார்ள்ஸ் லெக்கலெர்க் மூன்றாமிடத்தில் காணப்படுகின்றார்.
11 minute ago
16 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
16 minute ago
1 hours ago