Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 27 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

மரதனொன்றை இரண்டு மணித்தியாலங்களுக்குள் உத்தியோகபூர்வ போட்டியொன்றில் ஓடி முடித்த முதலாமவராக கென்யாவின் செபஸ்டியன் சவே ஞாயிற்றுக்கிழமை (26) மாறியுள்ளார்.
இலண்டன் மரதனை ஒரு மணித்தியாலம் 59 நிமிடங்கள் 30 செக்கன்களில் சவே கடந்துள்ளார்.
அந்தவகையில் சிக்காக்கோ மரதனில் 2023ஆம் ஆண்டு ஒக்டோபரில் 2 மணித்தியாலம் 35 செக்கன்களில் கடந்த கென்யாவின் கெல்வின் கிப்டும்மின் சாதனையை சவே முறியடித்துள்ளார்.
இந்த 42.195 கிலோ மீற்றர் மரதன் தூரத்தின் பெரும்பாலான பகுதியை சவேயின் குதிக்கால்களுடனேயே இருந்த எதியோப்பியாவின் யோமிஃப் கெஜெல்சா ஒரு மணித்தியாலம் 59 நிமிடங்கள் 41 செக்கன்களில் போட்டித் தூரத்தை பூர்த்தி செய்து இரண்டாமிடத்தைப் பெற்றதோடு, போட்டித் தூரத்தை 2 மணித்தியாலங்கள் 28 செக்கன்களில் பூர்த்தி செய்த உகண்டாவின் ஜேக்கப் கிப்லிமோ மூன்றாமிடத்தைப் பெற்றார்.
52 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago
1 hours ago