2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

ஆர்சனல் அணி வெற்றி

A.P.Mathan   / 2014 மே 18 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


இங்கிலாந்து F.A கிண்ண கால்பந்தாட்ட தொடரில் ஆர்சனல் அணி, ஹல் சிட்டி அணியை 3 இற்கு 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் ஆகியுள்ளது. ஆர்சனல் அணி பதினோராவது தடவையாக F.A கிண்ணத்தை வெற்றி பெற்றுள்ளது. F.A கிண்ணத்தை கூடுதலான தடவைகள் வென்ற அணியாக மன்செஸ்டர் ஜுனைட்டட் அணியுடன் ஆர்சனல் அணி தற்போது இணைந்துள்ளது. 1871ஆம் ஆண்டு தொடக்கம் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 9 வருடங்களின் பின்னர் ஆர்சனல் அணி ஒரு கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. 2000 ஆண்டுகளின் ஆரம்பங்களில் பலமாக இருந்த ஆர்சனல் அணி 2005ஆம் ஆண்டு F.A கிண்ணத்தை வென்றதன் பின்னர் எந்தக் கிண்ணத்தையும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று இரவு நடைபெற்ற 2014ஆம் ஆண்டுக்கான இறுதிப் போட்டியின் நேரம் நிறைவடைந்த வேளையில் இரு அணிகளும் தலா இரண்டு கோல்களைப் பெற்று சமநிலையில் நிறைவு செய்தன. முதற்ப் பாதியில் ஹல் சிட்டி அணி 2 இற்கு 1 என்ற ரீதியில் முன்னிலை பெற்று இருந்தது. இருப்பினும் ஆர்சனல் அணி 71ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலைப் பெற்று சமநிலை செய்தது. மேலதிக நேரத்தின் 109 ஆவது நிமிடத்தில் ஆர்சனல் அணி வெற்றி கோலைப் பெற்றது. 120 நிமிடங்களின் நிறைவில் ஆர்சனல் அணி 3 இற்கு 2 என்ற ரீதியில் வெற்றி பெற்றது. ஹல் சிட்டி அணி  4 ஆவது மற்றும் 9 ஆவது நிமிடங்களில் கோல்களைப் பெற்ற அதேவளை ஆர்சனல் அணி முதல் கோலை 17ஆவது நிமிடத்தில் பெற்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X