2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

வெளிநாட்டில் இலங்கையின் முதல் பயிற்றுவிப்பாளர்

A.P.Mathan   / 2014 மே 20 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ் அணியின் பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளருமான சந்திக்க ஹத்துருசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். 2010ஆம் ஆண்டு ஒழுக்காற்று நடவடிக்கை என்ற பேரில் இலங்கை கிரிக்கெட் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து ஹத்துருசிங்ஹ நீக்கப்பட்டார். அதன் பின் தன் குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவில் குடியேறிய ஹத்துருசிங்ஹ தற்போது நியூ சவுத்வேல்ஸ் அணியின் உதவி பயிற்றுவிப்பாளராக கடைமையாற்றி வருகின்றார். இருப்பினும் புதிய பதவியை தொடர்ந்து அந்த பதவியில் இருந்து விலகியுள்ளார்.

இலங்கை அணி மற்றும் நியூ சவுத்வேல்ஸ் அணிகளுக்கு பயிற்சி அளித்ததன் மூலம் சந்திக்க ஹத்துருசிங்ஹ நல்ல பெயரை சர்வதேச ரீதியில் பெற்றுள்ளார். உலகின் சிறந்த நுட்பம் மிக்க பயிற்றுவிப்பாளர் எனவும் வெளிநாட்டு பயிற்றுவிப்பாளர்களிலும் பார்க்க இவர் சிறப்பானவர் எனவும் குமார் சங்ககார, ஹத்துருசிங்ஹவிற்கு புகழாரம் சூட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் தான் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக கடமையாற்ற விருப்பத்துடன் இருப்பதாக தெரிவித்த ஹத்துருசிங்ஹ இலங்கை கிரிக்கெட் தன்னுடன் இது தொடர்பாக பேசவில்லை என கூறியிருந்தார். இலங்கை பயிற்றுவிப்பாளர் ஒருவர் வெளிநாட்டு அணிக்கு பயிற்றுவிப்பாளராக கடமையாற்றும் முதல் சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.

ஹத்துருசிங்க எமது அணியில் இருந்து விலகிப்போவதனால் கவலையடைகின்றோம். எமக்கு இழப்பு. ஆனாலும் அவருடைய அபார திறமைக்கு கிடைத்த பரிசு இது என நியூ சவுத்வேல்ஸ் அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரி கூறியுள்ளார். அதேவேளை தனிப்பட்ட ரீதியிலும் நல்ல குணங்களைக் கொண்டவர் ஹத்துருசிங்க, அதனால்தான் சர்வதேச ரீதியில் இப்படியான வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X