2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

பிரெஞ்சு பகிரங்க டெனிஸ் போட்டித் தொடரின் அரை இறுதிப் போட்டிக்கு ரபேல் நடால் தெரிவு

Super User   / 2014 ஜூன் 05 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சு பகிரங்க டெனிஸ் போட்டித் தொடரின் அரை இறுதிப் போட்டிக்கு ஸ்பெயின் வீரர்  ரபேல் நடால் ஒன்பதாவது தடவையாக தெரிவாகியுள்ளார்.

தனது நாட்டைச் சேர்ந்த டேவிட் பெரர் உடன் மோதிய நடால் 4 இற்கு 6 என்ற ரீதியில் முதல் சுற்றில் தோல்வியடைந்த போதும் அடுத்த மூன்று சுற்றுகளிலும் 6 இற்கு 4 இ 6 இற்கு 0 இ 6 இற்கு 1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

இன்னுமொரு காலிறுதிப்  போட்டியில் பிரித்தானிய வீரர் அன்டி முர்ரே 6 இற்கு 4 இ 6 இற்கு 1 இ 4 இற்கு 6 இ 1 இற்கு 6 இ 6 இற்கு 0 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீரரான காயெல் மொன்பில்ஸ் என்ற வீரரை வெற்றி பெற்றுள்ளார். இவர் ரபேல் நடாலுடன் அரை இறுதிப் போட்டியில் மோதவுள்ளார்.

லத்வியா வீரர் ஏர்னெஸ்ட் குல்பிஸ்இ  செக் குடியரசின் வீரர் தோமஸ் பெர்டிச் உடன் மோதி 6 இற்கு 3 இ 6 இற்கு'2 இ 6 இற்கு 4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

 இன்னுமொரு காலிறுதிப் போட்டி கனடா வீரர் மிலோஸ் ராவ்னிக் மற்றும் செர்பிய வீரர் நொவக் ஜோகோவிக் ஆகியோருக்கிடையில் நடைபெற்றது. இதில் ஜோகோவிக் 7 இற்கு 5 இ 7 இற்கு 6 இ 7 இற்கு 5இ 6 இற்கு 4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் படி ஏர்னெஸ்ட் குல்பிஸ் மற்றும் நொவக் ஜோகோவிக் ஆகியோர் இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளனர்.

தரபப்டுத்தல்களில் முதலிடத்தில் இருக்கும் ரபேல் நடால்இ இரண்டாமிடத்தில் இருக்கும் நொவக் ஜோகோவிக் ஆகியோர் இறுதிப் போட்டிக்கான அதிக வாய்ப்புகளைக் கொண்ட வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை மகளிருக்கான அரை இறுதிப் போட்டிகளுக்கு மரியா சரப்போவாஇ ஜூஜின் பௌச்சார்ட்இ சிமோனா ஹலேப்இ அன்றியா பட்கோவிக் ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .