2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

பிரெஞ்சு டென்னிஸ் போட்டியில் சரபோவா வெற்றி

Kanagaraj   / 2014 ஜூன் 08 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் தொடரின் மகளிருக்கான இறுதிப் போட்டியில் ரஸ்சிய வீராங்கனை மரியா சரப்போவா வெற்றி பெற்றுள்ளார்.

ரொமேனியா வீராங்கனை சிமோனா ஹலெப் உடன் மோதி 6 இற்கு 4 என்ற புள்ளியின் அடிபப்டையில் முதல் செட்டில் வெற்றி பெற்று, கடுமையான போட்டியான இரண்டாவது செட்டில் 6 இற்கு 7 என்ற ரீதியில் தோல்வியை சந்தித்தார்.

மூன்றாவது செட்டில் 6 இற்கு 4 என்ற புள்ளியின் படி வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை மரியா சரப்போவா தனதாக்கினார்.

இது அவரின் இரண்டாவது பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் தொடரின் சம்பியன் பட்டமாகும். 2012 ஆம் ஆண்டு முதற் தடவையாக இந்தப் பட்டத்தை வெற்றி பெற்றவர் கடந்த வருடம் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் இடம் இறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்து இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளார்.

தரப்படுத்தல்களில் நான்காமிடத்தில் உள்ள வீராங்கனை சிமோனா ஹலெப் உடன் மோதியே ஏழாமிடத்தில் உள்ள மரியா சரப்போவா வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .