2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

தகப்பனுக்கும், மகனுக்கும் கிரிக்கெட் விருது

Kanagaraj   / 2014 ஜூன் 08 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்கான விருதுகளை அந்த அணியின் கிரிக்கெட் சபை வழங்கியுள்ளது. டரின் பிராவோ சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதினைப்  பெற்றுக் கொண்டார். அவரின் சகோதரரான டுவைன் பிராவோ சிறந்த ஒரு நாள் போட்டிக்கான வீரர் விருதினையும், சிறந்த டெஸ்ட் போட்டி வீரர் விருதினை சிவ்நரையைன் சந்தர்போலும் பெற்றுக் கொண்டனர் . சிறந்த டுவென்டி 20 போட்டிகளின் வீரர் என்ற விருதினை சுனில் நரையன் பெற்றுக் கொண்டார்.

150 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சிவ்நரையைன் சந்தர்போல் மற்றும் 100 போட்டிகளில் விளையாடவுள்ள கிறிஸ் கெயில் ஆகியோருக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

மகளிருக்கான சிறந்த வீராங்கனை விருதினை ஸ்டெபனி டெய்லர் தெரிவானார். இதேவேளை சிவ்நரையைன் சந்தர்போலின் புதல்வர்  ரஜினரைன் சந்தர்போல் 19 வயதுக்குட்ப்பட்ட சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதைப் பெற்றுக் கொண்டார்.

கிரிக்கெட் விருது ஒன்றினை தகப்பனும் மகனும் ஒரே தடவை பெற்ற முதல் சம்பவமாக இதுவாக  இருக்கலாம் என நம்பப்படுகின்றது.இன்னும் பல விருதுகள் உள்ளக கிரிக்கெட் வீரர்களுக்கும் அணிகளுக்கும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .