2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

ரொனால்டோ பயிற்சிகளில்

Super User   / 2014 ஜூன் 09 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் சிறந்த வீரர் என்ற விருதைப் பெற்ற போர்த்துக்கல் நாட்டின் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பயிற்சிகளை ஆரம்பித்துள்ளார்.

உபாதை காரணமாக கடந்த சில வாரங்களாக பயிற்சிகளில் ஈடுபடாமை போர்த்துக்கலின் உலகக்கிண்ண தயார் படுத்தல்களில் பின்னடைவை ஏற்ப்படுத்தியிருந்தது. ஆரம்ப கட்டப் போட்டிகளில் இவர் விளையாட முடியாமல் போகலாம் என்றும் எதிர் பார்க்கப்பட்டது.

இதேவேளை போர்த்துக்கல் அணி விளையாடிய இரண்டு சிநேக பூர்வ போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை. ஆனாலும் அவருக்கு ஏற்ப்பட்ட தசைப் பிடிப்பும், முழங்கால் உபாதையும் குனமடைந்துள்ளது. இந்த நிலையில் பயிற்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.

இவர் விளையாட மாட்டார் என்ற சந்தேகம் போர்த்துக்கல் அணிக்கு மாத்திரமன்றி உலக கால்பந்தாட்ட ரசிகர்களுக்கும் கவலையை ஏற்ப்படுத்தி இருந்தது. 

அமெரிக்காவில் அணியுடன் பயிற்சிகளில் ஈடுபட்டு வரும் ரொனால்டோ செவ்வாய்க்கிழமை அயர்லாந்துடன் நடைபெறவுள்ள சிநேகபூர்வ போட்டியில் விளையாடவுள்ளார்.

போர்த்துக்கல் அணி உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரில் இம்மாதம் 16 ஆம் திகதி முதற்ப் போட்டியில் ஜேர்மனியுடன் விளையாடவுள்ளது. கிறிஸ்டியானோ ரொனால்டோ போர்த்துக்கல் அணியின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .