2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

தலைவராக ஸ்ரீனிவாசன் பதவியேற்கலாம்: நீதிமன்றம்

Kanagaraj   / 2014 ஜூன் 13 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசன், சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைவர் பதவியை பொறுப்பேற்காமல் தடுக்குமாரி பீகார் கிரிக்கெட் சம்மேளனம் பதிவு செய்த வழக்கை நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஐ.பி.எல் சூதாட்ட சர்ச்சையில் ஸ்ரீனிவாசனுக்கு தொடர்;பு இருக்கலாம் என்ற அடிப்படையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் முன்னாள் தலைவர ஸ்ரீனிவாசன் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

ஊழல் குற்றச்சாட்டு உடைய ஒருவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுக் கொண்டு இருக்கும் வேளையில் சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைவர் பொறுப்பை ஏற்கக் கூடாது என்று கூறியே பீகார் கிரிக்கெட் சம்மேளனம் குறித்த வழக்கை பதிவு செய்தது.

ஐ.பி.எல் சூதாட்ட விசாரணைகளின் போதும் குறித்த விடயம் வழக்கில் எடுத்ததுக்கு கொள்ளப்பட்ட போதும் நீதிமன்றம் ஸ்ரீனிவாசன் சர்வதேசக் கிரிக்கெட் சபையில்,  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் பிரதிநிதியாக செல்வதிலோ, தலைமைப் பொறுப்பை ஏற்பதிலோ ஆட்சேபனை இல்லை என தெரிவித்து இருந்தது.

ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி வழங்கப்பட்ட முடிவை கருத்தில் கொண்டே இந்த முடிவு வழங்கப்பட்டுள்ள போதும் இந்த விடயம் தொடர்பான விவாதம் இம்மாதம் 16ஆம் திகதி நடைபெறும் எனவும் நீதி மன்றம் மேலும் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X