2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

நடப்பு சம்பியன் ஸ்பெயின் உலக கிண்ணத்தில் இருந்து வெளியேற்றம்

A.P.Mathan   / 2014 ஜூன் 19 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கால்பந்தாட்ட உலகக்கிண்ண தொடரில் இருந்து, நடப்பு சம்பியனும் தரப்படுத்தலில் முதலிடத்திலிருக்கும் ஸ்பெயின் அணி முதற் சுற்றுடன் வெளியேற்றப்பட்டுள்ளது. தாங்கள் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தன் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளது. இதேவேளை குழு B இல் இருந்து அவுஸ்திரேலியா அணியும் வெளியேற்றப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா அணியும் தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்விகளை சந்தித்துள்ளது.

நேற்றுஇடம் பெற்ற குழு B இற்கான போட்டியில் நெதர்லாந்து, அவுஸ்திரேலியா அணிகள் மோதின. விறு விறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் அவுஸ்திரேலியா அணி ஆரம்பத்தில் ஆதிக்கம் செலுத்திய போதும் பின்னர் நெதர்லாந்து அணி தமது கட்டுப்பாட்டுக்குள் போட்டியை கொண்டு வந்தது. போட்டியின் 68ஆவது நிமிடம் வரை சமநிலை இருந்து வந்தது. முதலாவது கோலை 20ஆவது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் ஆயன் ரொபன் அடித்தார். அடுத்த ஒரு நிமிடத்தில் அவுஸ்திரேலியா வீரர் ரிம் கெகில் இரண்டாவது கோலை அடித்தார். 54ஆவது நிமிடத்தில் அவுஸ்திரேலியா அணித் தலைவர் மிலே ஜெட்னிக் அடித்த பனால்டி கோல் மூலம் அவுஸ்திரேலியா முன்னிலை பெற்ற போதும் 4ஆவது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் ரொபின் வன் பேர்சி அடித்த கோல் மூலம் போட்டி சமநிலைக்கு வந்தது. 68ஆவது நிமிடத்தில் மெம்பிஸ் டெபே அடித்த கோல் மூலம் நெதர்லாந்து அணி முன்னிலை பெற்று வெற்றியை தனதாக்கிக் கொண்டது. போட்டியின் நாயகனாக ஆயன் ரொபன் தெரிவு செய்யப்பட்டார்.

இரண்டாவது போட்டி குழு A இற்கான போட்டியாக குரேசியா கமரூன் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் குரேசியா அணி 4 இற்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கமரூன் அணியை வெளியேற்றி தமக்கான வாய்ப்பை தக்க வைத்துள்ளது. கமரூன் அணி தான் விளையாடிய இரு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. குழு A இல் உள்ள பிரேசில், குரேசியா, மெக்சிகோ அணிகளில் இரு அணிகளுக்கு வாய்ப்புக்கள் உள்ளன. குரேசியா அணியின் முதலாவது கோல் இவிக்கா ஒலிக் மூலம் 11ஆவது நிமிடத்தில் அடிக்கப்பட்டது. இவான் பெரிசிக் 48ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்தார். 61ஆவது மற்றும் 73ஆவது நிமிடங்களில் கோல்களை அடித்த மரியா மன்ட்சுகி போட்டியின் நாயகனாக தெரிவானார்.

மூன்றாவது போட்டியாக ஸ்பெயின், சில்லி அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் சில்லி அணி 2 இற்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. எடுர்டோ வர்காஸ் சில்லி அணிக்கு 20ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். சார்லஸ் அரண்குயிஸ் 43ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்தார். போட்டியின் நாயகனாக எடுர்டோ வர்காஸ் தெரிவு செய்யப்பட்டார்.

குழு B இல் தலா இரண்டு வெற்றிகளைப் பெற்றுள்ள சில்லி, நெதர்லான்ட்ஸ் அணிகள் அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X