2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

இன்றைய போட்டிகள்

A.P.Mathan   / 2014 ஜூன் 21 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இன்றைய போட்டிகளில் முதல் போட்டி இரவு 9.30 இற்கு ஆர்ஜன்டீனா - ஈரான் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது. இரு அணிகளுக்குமிடையில் ஒரு தடவை நடைபெற்ற போட்டி சமநிலையில் முடிவடைந்தது. குழு F இல் முதலிடத்தில் இருக்கும் ஆர்ஜன்டீனா, இன்றைய போட்டியில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இரண்டாவது போட்டி நள்ளிரவு 12.30 ஜேர்மனி - கானா அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது. இரண்டு அணிகளும் இதுவரை 02 போட்டிகளில் விளையாடியுள்ளனர். ஜேர்மனி அணி 02 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளும் குழு G இல் ஜேர்மனி அணி ஒரு வெற்றியைப் பெற்றுள்ள அதேவேளை, கானா அணி தோல்வியடைந்துள்ளது. 

மூன்றாவது போட்டி அதிகாலை 3.30 இற்கு பொஸ்னியா - நைஜீரியா அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது. இரு அணிகளும் முதற் தடவை போட்டியில் மோதுகின்றன. பொஸ்னியா அணி குழு F இல் முதற்ப் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. நைஜீரியா அணி தனது முதற்ப் போட்டியில் சமநிலையில் நிறைவு செய்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X