2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

நியூசிலாந்துக்கு டெஸ்ட் தொடர் வெற்றி

A.P.Mathan   / 2014 ஜூலை 01 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து அணிகளுக்கிடையில் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று அதிகாலை நிறைவுக்கு வந்தது. இந்தப் போட்டியில் 53 ஓட்டங்களினால் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி தொடரை 2 இற்கு 1 என்ற ரீதியில் கைப்பற்றியது. 
 
308 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி சகல விக்கெட்களையும் இழந்து 253 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஜேசன் ஹோல்டர் 52 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். டரன் பிராவோ 40 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் ரென்ட் போல்ட், ஜேம்ஸ் ரெட்வெல், மார்க் கிரெய்க் ஆகியோர் தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றினர். இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து  அணி 293 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஜிம்மி நீஷாம் 78 ஓட்டங்களையும், மார்க் கிரெய்க் ஆட்டமிழக்காமல் 46 ஓட்டங்களையும் பெற்றனர். 
 
பந்துவீச்சில் சுலைமான் பென் 5 விக்கெட்களையும், கெமர் ரோச் 4 விக்கெட்களையும் கைப்பற்றினர். மேற்கிந்திய தீவுகள் அணி தமது முதல் இன்னிங்சில் 317 ஓட்டங்களைப் பெற்றது. கிரெய்க் பிரத்வைட் 68 ஓட்டங்களையும், கேர்க் எட்வேர்ட்ஸ் 58 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக நைல் வக்னர் 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். நியூசிலாந்து அணி தமது இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 331 ஓட்டங்களைப் பெற்றது. இதில் கேன் வில்லியம்சன் ஆட்டமிழக்காமல் 161 ஓட்டங்களையும், ஜிம்மி நீஷாம் 51 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் கெமர் ரோச் 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். 
 
போட்டியின் நாயகனாகவும் தொடரின் நாயகனாகவும் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் தெரிவானார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X