
இலங்கை அணியின் சுழல்ப் பந்துவீச்சாளர் சசித்திர சேனநாயக்க கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேசக் கிரிக்கெட் பேரவை இந்த அறிவித்தலை வழங்கியுள்ளது.
அண்மையில் இங்கிலாந்து அணியுடான ஒரு நாள் சர்வதேசப் போட்டித் தொடரில் பந்தை வீசி எறிகின்றார் என்ற குற்றச்சாட்டினை போட்டி நடுவர்கள் தெரவித்தனர். இதனையடுத்து பரிசோதனைக்கு உட்படுத்தப்பட சசித்திர சேனநாயக்கவின் பந்துவீச்சு விதிகளை மீறி இருப்பதாகவும் அவர் தொடர்ந்து பந்துவீச முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனை தொடர்பாக ஆட்சேபனைகள் இருப்பின் சசித்திர சேனநாயக்க சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் பந்துவீச்சு பரிசோதனைக் குழுவிடம் 14 நாட்களுக்குள் காரணங்களை கேட்டறிய வாய்ப்பு வழங்கப்படும். இல்லாவிடின் மீண்டும் போட்டிகளில் பங்குபற்ற, பந்துவீச்சு பாணியை மாற்றி மீள் பரிசோதனை செய்து தனது பந்துவீச்சு பாணியை உறுதி செய்து விளையாட முடியும். மீள் வருகையின் பின்னர் இதே குற்றம் கண்டறியப்பட்டால் குறைந்தது ஒரு வருட தடவை விதிக்கப்படும்.
2011 ஆண்டு இலங்கை A அணிக்காக சசித்திர சேனநாயக்க விளையாடிய போது இதே குற்றம் முன் வைக்கப்பட்டது. பின்னர் பந்துவீச்சு பாணியில் மேம்படுத்தல்களை செய்து மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் பரிசோதிக்கப்பட்டு பந்துவீச்சு விதிமுறைகளுக்குள் இருப்பதாக முடிவு வழங்கப்பட்டது.
சசித்திர சேனநாயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது இலங்கை அணிக்கு பின்னடைவு உருவாக்கும். குறிப்பாக உலகக்கிண்ண தயார் படுத்தல்களில் மிகப் பெரிய பின்னடைவை வழங்கும். ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் முக்கிய பந்துவீச்சாளராக திகழும் சசித்திர சேனநாயக்க தேவையானா நேரங்களில் துடுப்பாட்டத்தின் மூலமும் கை கொடுக்கும் ஒருவர் ஆவார்.