
இலங்கை, தென் ஆபிரிக்கா அணிகளுக்கிடையில் இன்று ஆரம்பமாகியுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் நேர முடிவில் இலங்கை அணி 86 ஓவர்களை எதிர்கொண்டு 5 விக்கெட்கள் இழப்பிற்கு 305 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இதில் மஹேல ஜெயவர்தன ஆட்டமிழக்காமல் 144 ஓட்டங்களையும், அஞ்சலோ மத்தியூஸ் 63 ஓட்டங்களையும் கௌஷால் சில்வா 44 ஓட்டங்களையும் பெற்றனர். மஹேல ஜெயவர்த்தனவின் 34ஆவது சதம் இதுவாகும். கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இவர் பெற்றுள்ள 11ஆவது சதம் இதுவாகும். தென் ஆபிரிக்கா அணியின் பந்துவீச்சில் டேல் ஸ்டைன், JP டுமினி ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளனர்.
எஸ்.எஸ்.சி மைதானத்தில் இரு அணிகளும் 4 போட்டிகளில் மோதியுள்ளன. இரு போட்டிகளில் இலங்கை அணியும் ஒரு போட்டியில் தென் ஆபிரிக்கா அணியும் வென்றுள்ளன. ஒரு போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது. இலங்கை அணி இந்த மைதானத்தில் விளையாடியுள்ள 36 போட்டிகளில் 17 இல் வெற்றி பெற்றுள்ளது. 6 போட்டிகளில் தோல்வியடைந்துள்ள அதேவேளை 13 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன.
இந்தப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றால் மாத்திரமே தொடரைக் கைப்பற்ற முடியும்.